• Call us: +91 96007 98555
  • info@kongucollege.com

events

Announcements

பன்னாட்டு தமிழாய்வுக் கருத்தரங்கம்

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அட்லாண்டா அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகம் இணைந்து நடத்திய பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்வேறு வெளிநாட்டு பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் மத்திய மாநில பல்கலைகழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் ஆகியோர் தங்களது ஆய்வு கட்டுரையினை வழங்கினர். இவ்விழாவிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளைத் தலைவர் அட்லஸ் ஆ.நாச்சிமுத்து அவர்கள் தலைமை வகித்தார்.  இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இலண்டன் பல்கலைக்கழக விரிவுரையாளர் சிவாபிள்ளை அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர்தம் சிறப்புரையில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1914 ஆம் ஆண்டு தமிழ் இருக்கை ஏற்படுத்தப்பட்டது. பின்பு அது பல காரணங்களால் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது இருக்கை ஏற்படுத்தப்பட்டத்தோடல்லாமல் கடந்த ஜீலை முதல் தமிழை பயிற்று மொழியாக பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிக்கிறோம். இங்கு படிக்கும் மாணவர்கள கூட மேற்படிப்பினை இலண்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.மேலும் இது போன்றதொரு ஆய்வுக் கருத்தரங்கள் நடைபெறுவதன் மூலம் நுட்பமான இலக்கிய பண்பாடுகளையும் கலாசாரத்தையும் நம் மொழி பெற்றுள்ளது என்பதை உலக்குக்கு பறைசாற்றலாம் என தெரிவித்தார்.

சிறப்பு விருந்திரனராக சிங்கப்பூர் சமூக அறிவியல் கல்லூரி பேராசிரியர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி அவர்கள்  அவர்தம் உரையில் மொழி ஒருவருக்கு விழி போன்றது.பிற நாட்டவர்கள் தமிழ் மொழியினை உற்று நோக்குகின்ற இவ்வேளையில் தமிழ்நாட்டில் மெல்ல தமிழ் மக்கள் தமிழ் பேசுவதை குறைத்து கொண்டுள்ளது சற்றே வருந்தத்தக்கது. பல்வேறு  நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கின்ற தமிழ் இங்கும் வளர்ச்சி பெற வேண்டும். இளையோர்களாகிய நீங்கள் தமிழ் கற்றல் கற்பித்தல் அல்லது பொழுது போக்கிற்காவது தமிழ் படித்தலை மேற்கொள்ள வேண்டும். தற்கால இலக்கியங்கள் மட்டுமல்லாது முன்னோடி இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் வரை அனைத்து இலக்கியங்களிலும் உள்ள இன்பத்தை நுகர வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு நம் மொழியின் பெருமையை எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

சிறப்பு விருந்திரனராக சென்னை குறள் மலைச் சங்க நிறுவனர் பா.இரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக முனைவர்.சு.அழகேசன் மேனாள் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அவர்கள் கருத்தரங்க அமர்வுத் தலைவராக இருந்து வழிநடத்தினார். கொங்கு கல்விக் அறக்கட்டளைத் துணைத்தலைவர்.திரு.ஏ.வீரப்பன் கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் தாளாளர் உயர்திரு.எஸ்.இராஜேந்திரன்   இஇராமநாதபுரம்  சேதுபதி அரசு கலை கல்லூரி பேராசிரியர் முனைவர் வீ.பால்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரியின் முதல்வர்(பொ) திருமதி.புஸ்பராணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.முன்னதாக தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர்.சி.அழகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். விழா நிறைவாக திருமதி.கௌசல்யா தமிழ்த்துறை தலைவர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ மாணவியர் மற்றும் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ மற்றும் மாணவியர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.கருத்தரங்க ஏற்பாட்டினை தமிழாய்வுத் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் செய்திருந்தனர்.

SHARE: