உலக தாய்மொழி தினவிழா

கொங்கு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறையின் முத்தமிழ் பேரவை சார்பாக ‘உலக தாய்மொழி தின விழா’ தீரன் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கல்வி ஆலோசகர், வாழ்வியல் நெறியாளர், திரு Rtn. ச.சேதுபதி அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கணினி அறிவியல் துறை பேராசிரியர் திருமதி. L.முத்துலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு மலையாள மொழியில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் திரு.கி.குமரவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் கலந்துகொண்டு இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் அரபு போன்ற மொழிகளில் சிறப்பாக உரையாற்றினர். மேலும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஈ. கௌசல்யா அவர்கள் மேற்கொண்டு சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்.