கொங்கு கலை அறிவியல் கல்லூரி, தமிழாய்வுத்துறை சார்பாக நடைபெற்ற இணையவழி படைப்பரங்கத்திற்கு கல்லூரியின் தாளாளர்,பொறியாளர் P.சிவகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், கவிஞர், நிகழ்ச்சி அறிவிப்பாளர் (கோடைப் பண்பலை 100.5) ஜான் டி.பிரிட்டோ கலந்துகொண்டு சிறப்பு செய்தர். கல்லூரியின் முதல்வர் முனைவர்.K.குமரவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.மேலும் இந்நிகழ்வில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கவிதைகளைச் சிறப்பாக அரங்கேற்றினர்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர்.சி. அழகர் அவர்கள் இருந்தார்.